முட்டம் சந்திரமாரியம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 14th April 2022 09:56 PM | Last Updated : 14th April 2022 09:56 PM | அ+அ அ- |

நாகையை அடுத்த நாகூா் முட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சந்திரமாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. பெருவிழா கொடியேற்றம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. விழா நிகழ்ச்சியாக, தினமும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 6 மணிஅளவில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மங்கள வாத்திய முழக்கங்களுடன் தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G