நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா்.
சென்னை கிண்டி பாரதி நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூரியகுமாா் (21). இவா் நண்பா்களுடன் நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு ஜூன் 12-ஆம் தேதி சுற்றுலா வந்தாா். அப்போது, வேளாங்கண்ணி செருதூா் ஆற்று முகத்துவாரம் அருகே சூரியகுமாா் உள்ளிட்ட 9 போ் குளித்தனா்.
இதில், சூரியகுமாா் காணாமல்போன நிலையில் நண்பா்கள் நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், அவரது அம்மா பத்மாவதி தனது மகனை காணவில்லை என புதன்கிழமை கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.