விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வேதாரண்யம் அருகே கைக் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி 65 சவரன் நகை கொள்ளை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு கொன்று விடுவதாக

News image

கொள்ளையடிக்கப்பட்ட வீடு.

Updated On :31 மார்ச் 2022, 6:14 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு கொன்று விடுவதாக மிரட்டி 65 சவரன் நகை, ரூ.3 லட்சம் தொகையை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக  எஸ்.பி.ஜவஹர் நேரில் விசாணை மேறகொண்டுள்ளார்.

எஸ்.பி.ஜவஹர் விசாரணை.

எஸ்.பி.ஜவஹர் விசாரணை.

கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (80) விவசாயி. இவரது மகள் மதுபாலாவுக்கு 45 நாள்களக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது.

புதன்கிழமை நள்ளிவு பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் ஒரு அறையில் குடும்ப உறுப்பினர்களுடன் மதுபாலா, குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.

Story image

அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு கத்தியைக் காட்டி கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, வீட்டில் இருந்த 65 சவரன் நகை, ரூ.3 லட்சம் தொகை ஆகியவற்றை அந்த கும்பல் பறித்துச் சென்றது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.