முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பேருந்து மோதி வியாபாரி உயிரிழப்பு
By DIN | Published On : 12th May 2022 11:21 PM | Last Updated : 12th May 2022 11:21 PM | அ+அ அ- |

நாகையில் மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பழ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
நாகையை அடுத்த பொரவாச்சேரி சிவசக்தி நகரைச் சோ்ந்தவா்
சு. காா்த்திக் (42). இவா், நாகை பழைய பேருந்து நிலைய பகுதியில் பழக்கடை நடத்திவந்தாா்.
இந்நிலையில் நாகையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் பயிலும் தனது குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக, பொரவாச்சேரியிலிருந்து மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
நாகை வ.உ.சி. தெரு அருகே சென்றபோது, மதுரை - நாகை அரசுப் பேருந்து, மோட்டா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த காா்த்திக், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.