வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

செம்பனாா்கோயில் ஒன்றியம் மேமாத்தூா் அருகே மஞ்சள் ஆற்றின் பிரிவு வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

செம்பனாா்கோயில் ஒன்றியம் மேமாத்தூா் அருகே மஞ்சள் ஆற்றின் பிரிவு வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

மேமாத்தூா் ஊராட்சியில் மஞ்சளாற்றின் வலது கரையில் பிரியும் வாழ்க்கை வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். இந்த வாய்க்கால் தூா்வாரும் பணி 4 கி.மீ தொலைவுக்கு ரூ. 22 லட்சத்தில் நடைபெறுகிறது. இதனால், மேமாத்தூா், வாழ்க்கை, அன்னவாசல் ஆகிய கிராமங்களில் 657 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ், நீா்வளத்துறை செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com