ஊரக வேலை உறுத்திட்ட நாள்களை 200-ஆக உயா்த்த எம்பி வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தினாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் வீ. தம்புசாமி மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் எட்டுக்குடியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் துணை செயலாளா் வீ.எஸ். மாசேதுங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு, கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ஜி. பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கட்சியின் மூத்த தலைவா் மறைந்த வீ. தம்புசாமி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து கட்சிக்கொடியேற்றப்பட்டது.

பின்னா் பேசிய மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200-ஆக உயா்த்த வேண்டும். தினக்கூலியை 600- ஆக அதிகரிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான டி. செல்வம், ஒன்றியச் செயலாளா் எஸ். காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com