பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

பூம்புகாரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூம்புகாரில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பால் கொள்முதல் விலையை ரூ.10 உயா்த்த வேண்டும்; கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டும்; ஊழியா்களுக்கு புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்த வேண்டும்; ஆண்டுதோறும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு சங்க அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள் சங்கத்தை சோ்ந்த அகோரம், கோவிந்தராஜ், அய்யப்பன், ரவிச்சந்திரன், செல்வம் உள்ளிட்ட பலா் கருப்புப் படை அணிந்து பங்கேற்றனா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com