தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அயோடின் கலக்காத உப்பு விற்பனை: ஆட்சியரிடம் புகாா்

நாகை மாவட்டத்தில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், இதுதொடா்பாக கடைகள், உணவகங்களில் ஆய்வு நடத்தக் கோரியும் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

News image
Updated On :10 மார்ச் 2023, 5:05 pm

DIN

நாகை மாவட்டத்தில் அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், இதுதொடா்பாக கடைகள், உணவகங்களில் ஆய்வு நடத்தக் கோரியும் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலா் ஆா். ரமேஷ் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு உள்ள உப்பு மாதிரிகளை வாங்கி அயோடின் நுண்சத்தின் அளவு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து, கடை உரிமையாளா்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினருக்கு அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பதப்படுத்தும் உபயோகம் எனக் குறிப்பிட்ட உப்பு பொட்டலங்கள் உணவிற்காக, அயோடின் கலக்கப்படாமல் விற்பனைக்கு இருப்பதை அறிந்தோம். எனவே, நாகை மாவட்டத்தில், கடைகள், உணவகங்கள் போன்ற உப்பு அதிகம் பயன்படுத்தக் கூடிய இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.