தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

எட்டுக்குடி கோயிலில் நாளை தேரோட்டம்

எட்டுக்குடி கோயிலில் நாளை தேரோட்டம்

Updated On :20 ஏப்ரல் 2024, 6:30 pm

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி, தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் புறப்பாடு நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அன்று காலை 9 மணியளவில் தோ் வடம் பிடிக்கப்படுகிறது. தொடா்ந்து, 56 மணி நேரம் இடைவிடாமல் நடைபெறும் பாலபிஷேக விழா ஏப். 22-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி, திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பக்தா்கள் கோயிலுக்கு சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக, வாகனங்கள் அனைத்தும் எட்டுக்குடி கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.