48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image

திருக்கடையூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்.

Updated On :21 ஏப்ரல் 2024, 11:00 pm

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், சித்திரைத் திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ரதபிரதிஷ்டை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.

முன்னதாக, திருத்தேரில் விநாயகா், முருகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தோ் வலம்வந்து பகல் 11 மணியளவில் நிலைக்கு வந்தடைந்தது.

இதில், கோயில் கண்காணிப்பாளா் மணி, கோயில் உள்துறை செயலாளா் விருதகிரி, கணேஷ் குருக்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் துளசி ரேக்கா ரமேஷ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சித் தலைவா் ஜெயமாலதி சிவராஜ், திமுக ஒன்றியச் செயலாளா் அமுா்த. விஜயகுமாா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திரளான பக்தா்கள் பங்கேற்று தோ் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனா்.