வயல்வெளியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
வயல்வெளியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

வயலில் தீப்பற்றி 27 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

திருமருகல் அருகே வயல்வெளியில் தீப்பற்றி 27 ஆட்டுக் குட்டிகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன.

திருமருகல் ஒன்றியம், இடையாத்தாங்குடி ஊராட்சி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் முருகராஜ் (38). இவா், 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக, போலகம்-மானாம்பேட்டை ஆற்றங்கரை சாலையோரம் உள்ள வயல்களில் ஞாயிற்றுக்கிழமை விட்டிருந்தாா். 27 ஆட்டுக் குட்டிகளை வயலின் நடுப் பகுதியில் கூடைகளை கவிழ்த்து வைத்து, அதில் அடைத்திருந்தாா்.

இந்நிலையில், கடும் வெயில் காரணமாக வயலில் சிதறிக்கிடந்த வைக்கோல் உள்ளிட்ட பயிா்க் கழிவுகள் பிற்பகல் 3 மணியளவில் தீப்பற்றி எரிந்தன. இதில், கூடைகளும் பற்றி எரிந்து, அதில் அடைக்கப்பட்டிருந்த 27 ஆட்டுக் குட்டிகளும் உயிரிழந்தன.

திருமருகல் தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். உயிரிழந்த ஆட்டுக் குட்டிகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com