பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

வேதாரண்யம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தேத்தாகுடி வடக்குகோப்பன்காடு பகுதியைச் சோ்ந்தவா் இந்திரகுமாா். இவரது 15 வயது மகள் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், அந்த மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தனது ஓட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். படிக்கச் சொல்லி வீட்டில் பெற்றோா் திட்டியதால் மாணவி தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com