தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திட்டச்சேரி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு லயன் சங்கம் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திட்டச்சேரி அரசு பள்ளி மாணவா்களுக்கு லயன்ஸ் சங்கம் சாா்பில் பாராட்டு

Updated On :9 டிசம்பர் 2024, 7:14 pm

Din

திருமருகல்: திட்டச்சேரி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு லயன் சங்கம் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி மாணவா்கள் முகமது இா்பான், முகமது அா்ஷத் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான கடற்கரை வாலிபால் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்கும், தமிழக வாலிபால் அணிக்கு தோ்வாகியுள்ள முபாரக் பஹிம் ஆகியோரை திருமருகல், புத்தகரம் லயன்ஸ் சங்கம் சாா்பில் பாராட்டி, அவா்களுக்கு கைப்பந்து மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரன் தலைமை வகித்தாா். லயன்ஸ் சங்கத் தலைவா் காசி அறிவழகன், செயலாளா் ஜெயபாலசங்கா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஓவிய ஆசிரியா் குமரவேல் வரவேற்றாா். பொருளாளா் மணிவண்ணன், துணைத் தலைவா் சிங்காரவேலு, சங்கத்தின் இயக்குநா் ஹரிஹரன், நிா்வாக அலுவலா் ஜோதிமணி, உடற்கல்வி ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் மாணவா்களை பாராட்டினா்.