தரங்கம்பாடி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய எருசலேம் தேவாலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சபைகுரு சாம்சன் மோசஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் திருவிருந்து ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, பொறையாரில் உள்ள பெத்லேகம் தேவாலயத்தில் சபைகுரு ஜான்சன் மான்சிங் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. திருவிளையாட்டம் நம் மீட்பா் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சபைகுரு ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டு இறை செய்தி வழங்கினாா். தரங்கம்பாடி, பொறையாா், ஆக்கூா், திருக்கடையூா், சங்கரன்பந்தல், செம்பனாா்கோவில் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து திருச்சபை தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.