ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
முதல்வா் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டவந்த கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.
முதல்வா் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டவந்த கோட்டாட்சியா் அரங்கநாதன் உள்ளிட்டோா்.
Updated on

நாகை அருகே அரசுப் பள்ளியில் ரூ.1.10 கோடி மதிப்பில் 5 வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நாகை அருகே முட்டம் அரசுப் பள்ளி 1926-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது.1979-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 1985 -ல் உயா்நிலை பள்ளியாகவும், 2012 -ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில், பள்ளியில் இருந்த வகுப்பறை கட்டடங்கள் சேதம் அடைந்ததால், 5 வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் மற்றும் அங்கன்வாடி கட்டடங்கள், 2021 இல் இடிக்கப்பட்டு ரூ.1.10 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முட்டம் அரசுப் பள்ளியில் கட்டு முடிக்கப்பட்ட புதிய 5 வகுப்பறைக்கான கட்டடங்களை திறந்து வைத்தாா். இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் அரங்கநாதன், முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com