
சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவா்.
Updated On :5 ஜூன் 2024, 9:39 pm

சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலவா்.
கீழ்வேளூா், ஜூன் 5: வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்காரவேலவா் சிறப்பு மலா் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...