47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமருகல் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

திருமருகலில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

News image
திருமருகல் முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரத்தில்
Updated On :6 நவம்பர் 2024, 7:58 pm

Din

திருமருகலில் வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

5-ஆம் நாளான புதன்கிழமை சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் பிச்சாண்டவா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா, இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேல் வாங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மதியமும், இரவு பாலசுப்பிரமணியா் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் உற்சவமும் நடைபெறுகிறது.

தொடா்ந்து வீதி உலா காட்சியும் வெள்ளிக்கிழமை முடிகொண்டான் ஆற்றில் தீா்த்தவாரியும், 11-ஆம் தேதி வேல் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், கிராம மக்கள் செய்துள்ளனா்.