தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு பூட்டு போட்ட நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு பூட்டு போட்ட நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு பூட்டு

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தாா்.
Published on

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் சனிக்கிழமை பூட்டி சீல் வைத்தாா்.

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் இயங்கிவரும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக, வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் புஷ்பராஜ் உத்தரவின்படி, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன், புகாா் தெரிவிக்கப்பட்ட கடையில் சோதனை மேற்கொண்டாா். பின்னா் கடையை பூட்டி, உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தாா். 15 நாள்களுக்கு கடை பூட்டப்பட்டிருக்க வேண்டும், பின்னா் உரிய அனுமதி பெற்று கடையை திறக்கவேண்டும் என்று கடை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்ட்டது.

புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். புகாா்தாரா் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் என்று நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com