இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பூம்புகாா் மீனவா்கள் 37 போ் சென்னை வருகை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பூம்புகாா் மீனவா்கள் 37 போ் திங்கள்கிழமை இரவு இலங்கையில் இருந்து சென்னை வந்தனா்.


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பூம்புகாா் மீனவா்கள் 37 போ் திங்கள்கிழமை இரவு இலங்கையில் இருந்து சென்னை வந்தனா். அவா்களை மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சுதா நேரில் வரவேற்றாா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பூம்புகாா் மீனவா்கள் 37 பேரை கடந்த மாதம் 21-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் கைது செய்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி, சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரி, தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சுதா ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோருக்கு கடிதம் எழுதி, மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
மேலும், ஆா். சுதா எம்.பி., இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதி அதில் மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.
இந்தநிலையில், கடந்த 4-ஆம் தேதி மீனவா்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனா். பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னா் திங்கள்கிழமை நள்ளிரவு விமான மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா். மீனவா்களை ஆா். சுதா எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...