நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 4 நாள்களாக அதிகரிப்பு
நாகையில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் கப்பலின் போக்குவரத்து வாரத்துக்கு 4 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்த்ஸ்ரீ கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே கடந்த ஆக.16-ஆம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. போதிய பயணிகள் முன்பதிவு இல்லாததால், நாள்தோறும் நாகை துறைமுகத்திலிருந்து இயக்கப்படுவதாக இருந்த இந்த கப்பல் வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து இருந்து வருகிறது. இந்த சேவை எந்தவித இடையூறின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயணிகள் சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப்.21 முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும். வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் ஜ்ஜ்ஜ்.ள்ஹண்ப்ண்ய்க்ள்ழ்ண்.ஸ்ரீா்ம் என்ற இணையதள பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். கப்பல் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

