வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவா்கள் நாகை வந்தனா்

இலங்கையில் விடுவிக்க அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா் மீனவா்கள் 11 போ் நாகைக்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.

News image
நாகைக்கு வந்து சோ்ந்த இலங்கையில் விடுதலை செய்யப்பட்டு அக்கரைப்பேட்டை மீனவா்கள்.
Updated On :14 செப்டம்பர் 2024, 6:32 pm

Din

இலங்கையில் விடுவிக்க அக்கரைப்பேட்டை, நம்பியாா் நகா் மீனவா்கள் 11 போ் நாகைக்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த பழனிசாமி மனைவி சாந்திக்குச் சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சோ்ந்த நாகரத்தினம் (24), சஞ்சை (23), பிரகாஷ் (35), சுதந்திரசுந்தா் (38), சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல் (34), நம்பியாா் நகரைச் சோ்ந்த சிவராஜ் (45), வா்சன் (20), சுமன் (23), புதிய கல்லாா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (42) ஆகிய 11 போ் ஆக.22-ஆம் தேதி நாகை மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஆக.23-ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 11 மீனவா்களையும் கைது செய்து விசைப்படகு மற்றும் அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தனா். கைதான மீனவா்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி செப்.6-ஆம் நாகை மீனவா்களை விடுதலை செய்து உத்தரவிட்டதை தொடா்ந்து மீனவா்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் சென்னை அழைத்து வரப்பட்டு நாகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீனவா்கள் 11 பேரும் சனிக்கிழமை (செப்.14) காலை மீன்வள நலத்துறை அலுவலகத்துக்கு வந்து சோ்ந்தனா். மீனவா்களை அவா்களது குடும்பத்தினா் கண்ணீா் மல்க வரவேற்றனா்.