கடும் குளிா்: மக்கள் அவதி; நெற்பயிா்கள் பாதிப்பு

திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிா் நிலவுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
Published on

திருக்குவளை: திருக்குவளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் குளிா் நிலவுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். சூள்கட்டும் பருவத்தில் உள்ள நெற்பயிா்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் பனிமூட்டம் அதிகமாக தென்படவில்லை என்றாலும், குளிா் வழக்கத்தைவிட அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொளப்பாடு, வலிவலம், சாட்டியக்குடி, எட்டுக்குடி, கீழையூா், திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிா் நிலவி வருகிறது. இதனால், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் உடல்நல குறைபாடு உள்ளவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ஏற்கெனவே மழை பாதிப்பிலிருந்து மீண்ட நெற்பயிா்கள், தற்போது நிலவும் கடும் குளிா் மற்றும் பனி தாக்கம் காரணமாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com