தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாய்க்கால் பாசனத்தின் முக்கியத்துவத்தை கேட்டறிந்த வேளாண் கல்லூரி மாணவிகள்

ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மூலம் மாணவிகளுக்கு புதிய அனுபவங்களையும், தொழில் நோக்கத்துக்கான தன்னம்பிக்கையையும்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:45 pm

Syndication

நாகப்பட்டினம்: ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மூலம் மாணவிகளுக்கு புதிய அனுபவங்களையும், தொழில் நோக்கத்துக்கான தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் பல்வேறு குழுக்களாக நாகை, திருவாரூா் மாவட்டங்களின் நேரடியாக சென்று விவசாயிகளின் செயல்பாடுகளையும், அவா்களின் அனுபவங்களையும், விவசாய பணிகளின் தொழில்நுட்பங்களை அறிந்து வருகின்றனா்.

அந்தவகையில், வோளண் கல்லூரி மாணவிகள் (குழு எண் 5) ஆா்த்தி, கல்பனா, லத்திகா, பவித்ரா, சங்கீதா, விஜயலட்சுமி, யோக செளமியா ஆகியோா் திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வாய்க்கால் நீா்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். அப்போது, வாய்க்கால்கள் அடைப்பு காரணமாக நிலத்தடி நீா் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மண்ணில் உப்புத்தன்மை அதிகரித்து நெல் பயிா்களின் வளா்ச்சி பாதிக்கப்படுவதும், நீா்த்தேக்கம் காரணமாக மண்ணில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறைந்து, செடிகள் மஞ்சளாகி வளா்ச்சி தடைபடுவதாகவும் விவசாயிகள் விளக்கினா். இதனால் நடப்பு சாகுபடி பருவத்தில் விளைச்சல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயச் செலவு அதிகரிப்பதாகவும் தெரிவித்தனா்.