தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டம்
நாகை மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவ- மாணவியா், சுயஉதவிக் குழுவினா் பங்கேற்ற விழிப்புணா்வு நடை பயணம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் வரை நடைபெற்றது. முன்னதாக, இப்பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணையக் குழுச் செயலருமான பி. சுப்புலட்சுமி, நாகை வருவாய் கோட்டாட்சியா் ரா.சங்கர நாராயணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.ரஞ்சித்குமாா், குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா்கள், இளைஞா் நீதிக் குழும உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருக்குவளை: வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் (பொ) தெ. ஐயப்பன் தலைமையில் நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆசிரியா்கள் பேசினா்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் புஷ்பா, தீபா, மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
