ஒளவையாா் விருதுக்கு டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், ஒளவையாா் விருது பெற டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு, ஆண்டுதோறும் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி ஒளவையாா் விருது முதல்வரால் வழங்கப்படுகிறது.
இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு, தமிழக அரசின் விருதுகள் இணையதளம் டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 203 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் தொலைபேசி எண் 91500-57450-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
