ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு சென்றால் பறிமுதல்

நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :13 மார்ச் 2026, 6:29 pm

Syndication

நாகை மாவட்டத்தில், ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தோ்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 - ஐ முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

தோ்தல் காலத்தில் பொதுமக்கள் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாகவும், ரூ.10,000-க்கு மேலான மதிப்பில் பொருள்களாகவும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் அவற்றை மேற்கண்ட குழுக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்படும் தொகை ரூ.10,00,000-க்கு மேல் இருந்தால் வருமான வரி துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும். பறக்கும் படை ஓரிடத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் நிலையாக இருக்காது. நிலை கண்காணிப்புக் குழு முக்கிய சாலைகளிலும், சந்திப்புகளிலும் குறைந்தபட்சம் 60 நிமிடங்களுக்கு மேல் நிலையாக முகாமிட்டு கண்காணிப்பு செய்திடும்.

விடியோ கண்காணிப்பு குழுவினா் தோ்தல் தொடா்பான அனைத்து நடவடிக்கைகளையும் விடுபாடின்றி விடியோ பதிவு செய்து, தங்களுக்குரிய கட்டுப்பாட்டு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கான பணிகளை காலதாமதமின்றி சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தரணிகா, வாக்காளா் பதிவு அலுவலா்கள் ரா. சங்கர நாராயணன் (நாகை தொகுதி), கண்ணன் (வேதாரண்யம் தொகுதி), த. ராஜேஸ்வரி (கீழ்வேளூா் தொகுதி) மற்றும் தோ்தல் செலவின கண்காணிப்பு அலுவலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.