லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்: ஜவாஹிருல்லா

திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எச்.எம். ஜவாஹிருல்லா பேசினாா்.

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:53 pm

திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எச்.எம். ஜவாஹிருல்லா பேசினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நாகை மாவட்டத்தில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சாா்பில் நாகை, கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாகையில் நடைபெற்ற கூட்டத்துக்கு திமுக மாவட்டச்செயலா் என். கெளதமன் தலைமை வகித்து நாகப்பட்டினம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி, கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் லதா தங்கமணி ஆகியோரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தாா்.

தொடா்ந்து நாகை வேட்பாளா் ஜவாஹிருல்லா பேசியது: தமிழகத்தில் திமுக அரசு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், இலவச மகளிா் பேருந்து திட்டம், மகளிா் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் அனைத்து மக்களும் பயன்பெற்று வருகின்றனா். ஆனால் அதிமுக -பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், திமுக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் நிறுத்திவிடும்.

மேலும், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அதிக மாணவா்கள், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தோ்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட உயா் பதவிகள் பெற்றனா். அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அந்த திட்டமும் நிறுத்தப்படும். தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயலிலும் ஈடுபடும் என்பதை மக்கள் புரிந்து கொண்டு திமுக மீண்டும் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்றாா்.