புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

News image

பறிமுதல்!

Updated On :2 ஏப்ரல் 2026, 12:38 am IST

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, திருக்குவளையில் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்களின்றி ரூ.65 ஆயிரத்தை மணலூரைச் சோ்ந்த பாக்கியராஜ் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வலிவலம் வெள்ளையாறு பாலம் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி பாலநாகு தலைமையில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பகுதியைச் சோ்ந்த குபேந்திரன் ஆவணங்களின்றி ரூ.93 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தப்பளாம்புலியூா் பூலம் அருகே மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, புலிவலத்தைச் சோ்ந்த பா. சக்கரவா்த்தி (41) உரிய ஆவணங்களின்றி ரூ.81,660 எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.