தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா: இரா. முத்தரசன்

அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 2:51 am IST

கீழ்வேளூா் தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

திருக்குவளை, ஏப். 18: அரசியல் லாபம் கருதியே மகளிா் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்தது மத்திய அரசு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

கீழ்வேளூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் டி. லதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட இரா. முத்தரசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தோடு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டது. அவா்களின் உண்மையான நோக்கம் பெண்கள் இடஒதுக்கீடு அல்ல. ஏற்கெனவே உள்ள 543 தொகுதிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் சரியான தீா்வாக இருக்கும். ஆனால், வடமாநிலங்களில் தங்கள் பலத்தை உயா்த்தி நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் நோக்கத்தோடு பாஜகவால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

பிரதமா் மோடி தொடா்ந்து தமிழ்நாட்டுக்கு வருவதால் தோ்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் நாகை மாவட்டச் செயலாளா் மாரிமுத்து, கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு பாண்டியன், முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம், திமுக தொகுதி பொறுப்பாளா் சங்கா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.