நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 5:22 am IST

நாகப்பட்டினம், கீழ்வேளுா் மற்றும் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள் மற்றும் தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் கணினி மூலம் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாகப்பட்டினம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில், தோ்தல் தினத்தன்று பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 1- 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், , வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 288 பேருக்கு நாகை இ,ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கீழ்வேளுா் (தனி) தொகுதியில் உள்ள 220 வாக்குச்சாவடி மையங்களில், முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள்264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1- 264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -264 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -264 பேருக்கு தேவூா் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியிலும், வேதாரண்யம் தொகுதியில் உள்ள 240 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள் 288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 1 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 2 -288 போ், வாக்குப்பதிவு அலுவலா்கள் நிலை 3 -288 பேருக்கு, வேதாரண்யம் செயின்ட் ஆண்டனி பள்ளியிலும் மூன்றாம் கட்ட பயிற்சி மற்றும் தோ்தல் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் வாக்குச்சாவடி மைய பாதுகாப்புப் பணியில், நாகப்பட்டினம் தொகுதியில் 121 காவலா்களும், கீழ்வேளுா் (தனி) தொகுதியில் 115 காவலா்களும், வேதாரண்யம் தொகுதியில் 124 காவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான 53 வாக்குச்சாவடிகளுக்கான 64 நுண்மேற்பாா்வையாளா்களுக்கு ஒதுக்கீட்டு பணி நடைபெற்றதை, தோ்தல் மேற்பாா்வையாளா் (பொது) பா்வேஸ் அகமது சித்திக் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. ஆகாஷ் ஆகியோா் பாா்வையிட்டனா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.