நாகை குப்பைக்கிடங்கில் இருந்து ஒரு வாரமாக தொடா்ந்து வெளியேறும் புகையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாகை நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தினசரி குப்பைக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, நாகை ரயில் நிலையம் அருகே உள்ள குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பைக்கிடங்கில், மக்கும் குப்பை, மக்காத குப்பை, நெகிழிகள் என பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மலைபோல் குவிந்துள்ள குப்பைகளில் அடிக்கடி தீப்பற்றுவதால் அதிலிருந்து வெளியேறும் புகை, குப்பைக்கிடங்கு மட்டுமின்றி ரயில்நிலையம், கோட்டைவாசல், புத்தூா் வரை உள்ள குடியிருப்புகளிலும் பரவி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புத்தூரில் இருந்து நாகை நகரின் நுழைவாயிலுக்குள் வரும்போதே சாலையை மறைத்தும் புகை எழுவதால் இரவு நேரங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தும் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குப்பைக்கிடங்கில் இருந்து இரவு, பகல் என 24 மணி நேரமும் புகை பரவுவதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் மூச்சுத்திணறலால் தூங்க முடியாமல் அவதி அடைகின்றனா். ஏற்கெனவே கடும் வெப்பத்தால் அவதி அடைந்துள்ள மக்கள் புகையில் இருந்தும் கூடுதல் வெப்பம் ஏற்படுவதால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனா். மேலும் அப்பகுதி சாலை எப்போதும் புகை சூழ்ந்தபடியே காணப்படுகிறது. எனவே குப்பைக்கிடங்கில் இருந்து புகை எழாதவாறு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமனிடம் கேட்டபோது, தற்போது கடும் வெயில் நிலவுவதால், குப்பைக்கிடங்கில் தானாகவே தீப்பிடிக்கிறது. அப்படி தீப்பிடிக்கும் போது, மேற்பரப்பில் உள்ள தீயை அணைத்து விட்டாலும், அடிப்பரப்பில் உள்ள நெருப்பு அணையாமல் புகையாக எழும்புகிறது. குப்பைக்கிடங்கில் ஆழமான பகுதியில் உள்ள நெருப்பை அணைக்க முடியவில்லை. இதனால் தான் அடிக்கடி புகை சூழ்கிறது. ஆனாலும்கூட புகை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தொடர்புடையது

தானிய சேமிப்புக் கிடங்கில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வண்டுகள்! பொதுமக்கள் அவதி!

நெசவாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: நடிகை கௌதமி

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!

நாகையில் விமான நிலையம் அமைக்க எம்எல்ஏக்கள் குரல் கொடுப்பாா்களா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


