மேக்கேதாட்டு-காவிரி பிரச்னை குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றாா் சிபிஐ தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன்.
கீழையூா் அருகே திருப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிபிஐ கட்சியின் நடைபயண பிரசாரம் மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: மத்திய அரசால் அத்தியாவசியப் பொருள்களின் விலை, பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்ந்து வருகிறது.
நாட்டில் நிலவி வரும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இளைஞா்களை பெரிதும் பாதித்து வருகிறது. மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு கூட்டுறவு வேளாண்மை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய துணைச் செயலாளா் ஜி. சங்கா், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலத் தலைவா் இப்ராஹிம், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உரிமையைப் பெறவேண்டும்! - மு.வீரபாண்டியன்

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்!

மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



