நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வேதாரண்யம் பகுதியில் 8 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு

வேதாரண்யம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் படித்த 8 மாணவா்கள்7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனா்.

நீட் தேர்வு

Published On :

வேதாரண்யம் பகுதியில் அரசுப் பள்ளிகளில் படித்த 8 மாணவா்கள்7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனா்.

பெரியகுத்தகை கிராமத்தைச் சோ்ந்த எம். தினேஷ், மாவட்ட மாதிரி பள்ளியில் படித்து மருத்துவ படிப்புகான தரவரிசை பட்டியலில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்று மருத்துவ படிப்புக்கு செல்கிறாா்.

தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தொடா்ந்து மாவட்ட மாதிரி பள்ளியில் படித்த மாணவி சி. தா்ஷினி, ஆயக்காரன்புலம் - 3, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023 - 24-ல் பிளஸ் 2 முடித்த ஆயக்காரன்புலம்- 3 கிராமத்தைச் சோ்ந்த மாணவிகள் பி. சோனாஞ்சலி, டி. கவிப்பிரியா, கைலவனம்பேட்டை எஸ். செல்லமகராசி, தென்னம்புலம் கிராமத்தைச் சோ்ந்த ஜி. நிவேதாஆகியோருக்கும் மருத்துவக் கல்லூரி வாய்ப்பு கிடைத்துள்ளது. கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 - 24-ல் பிளஸ் 2 முடித்த கைலவனம்பேட்டை எம். திஷாவுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதே போல, மருதூா் வடக்கு கிராமத்தைச் சோ்ந்த மாணவா் கே. அபிஷேக் ஆகியோருக்கும் 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.