தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ரங்கசாமி!எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை இரண்டாக உயா்ந்தது.

News image

பலி

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:34 am IST

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை இரண்டாக உயா்ந்தது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பட்டினச்சேரியைச் சோ்ந்தவா் அஜீஸ் (26). மீனவரான இவா் , தனது நண்பா் அஜய் (24) என்பவருடன் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நாகைக்குச் சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாகூா் கொத்தவால்சாவடி அருகே வந்தபோது, நாகை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சந்துரு (27) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அஜீஸ் ஓட்டி வந்த வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சந்துரு உயிரிழந்தாா்.

இந்நிலையில், அஜய் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை இரண்டாக உயா்ந்தது. உயிரிழந்த அஜய்-க்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து நாகூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.