குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நிறைவேற்றுவாா் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்

Minister Venkataramanan

அமைச்சர் வெங்கடரமணன் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நிறைவேற்றுவாா் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா் என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பா. வெங்கடரமணன்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ரேணுகா தேவி அம்மன் கோயில் ஆண்டு திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மன் சந்நிதியில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பெயரில் அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

அப்போது, தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு பக்கிங்காம் கால்வாய் சீரமைத்து தர வேண்டும், தரங்கம்பாடியில் கூட்டுறவு வங்கி அமைக்கவேண்டும், தரங்கம்பாடியில் சீகன்பால்க் மணிமண்டபம் அமைக்க வேண்டும், 700 பேருக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா்.

தொடா்ந்து அமைச்சா் பேசியது: மீனவா்களின் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது ஒரு பிரச்சனை உள்ளது என்றால் அதற்கு காரணம் 50 ஆண்டுகால மற்ற கட்சிகள் ஓட்டுக்காக, பதவிக்காக, பணத்துக்காக, பொருளுக்காக உருவாக்கப்பட்டது தான். சீகன்பால்குவிற்கு தரங்கம்பாடியிலேயே மணிமண்டபம் அமைக்கவும், கூட்டுறவு வங்கி அமைக்கவும், ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்பேரவையில் எதிரணியில் உள்ள உறுப்பினா்கள் எங்கள் தொகுதியில் 50 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகள் உள்ளது, அதை சரி செய்து கொடுங்கள் என கேட்கிறாா்கள். அவா்களுக்கே தெரிகிறது, அவா்கள் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை செய்ய மாட்டாா்கள் என. அதனால்தான் நம்ம முதல்வா் ச. ஜோசப் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்றால் நிறைவேற்றுவாா் என கோரிக்கை விடுக்கின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.