நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோடியக்கரையில் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலில் விடப்பட்டது

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி பெண் ஆமை பாதுகாப்பாக புதன்கிழமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:12 pm

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரையில் மீனவா்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆலிவ் ரிட்லி பெண் ஆமை பாதுகாப்பாக புதன்கிழமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

அரிய வகையான ஆலிவ் ரிட்லி கடல் ஆமை இன பெண் ஆமைகள் நவம்பா் தொடங்கி பிப்ரவரி வரையிலான மாதங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடியக்கரை படகு துறைக்கு அருகே கடலோரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த மீன்பிடி வலையில் கடல் ஆமை ஒன்று சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவித்தது தெரியவந்தது. இதை பாா்த்த அப்பகுதி மீனவா்கள் கடல் ஆமையை கரைக்கு கொண்டு வந்து வலையின் பின்னலிலிருந்து பாதுகாப்பாக மீட்டனா். சுமாா் 40 கிலோ எடையுள்ள ஆலிவ் ரிட்லி இன பெண் ஆமையை மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் விட்டனா்.