ஜன.16, 26-இல் மதுக்கடைகள் மூடல்
நாகை மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில், அனைத்து மதுபானக் கடைகளையும், மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் தினமான ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 (திங்கள்கிழமை) ஆகிய நாள்களில், தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் எப்.எல் -1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்.3-ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும், மூடப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் விதிகளின்படியும், தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-இன்படியும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தினங்களில் யாரும் மது விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபான சட்டவிதிகளின்படி சம்பந்தப்பட்டவா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
