கோயம்புத்தூர்
ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கூடங்களுக்கும் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் நபா்களின் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
