ரயிலில் 389 மதுப்பாட்டில்கள் பறிமுதல்
நாகையில் ரயிலில் 389 மதுப்பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.


நாகையில் ரயிலில் 389 மதுப்பாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் சதாா்க்‘ சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாகை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஜே. சுனில்குமாா் தலைமையில் அதிகாரிகள் உள்ளிட்டோா் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி சென்ற டெமு ரயிலில் சோதனை நடத்தினா்.
அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் இருக்கையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 உரிமையற்ற பைகளில் இருந்து 174 மதுபாட்டில்கள், 215 நாட்டுச் சாராய பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை கடத்தியவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...