புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மா சாகுபடி உயா்தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில், மாவட்ட அளவில் மா சாகுபடியாளா்களுக்கு உயா் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கருத்தரங்கத்தில் பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்ட தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டு கையேடு.

Updated On :10 மார்ச் 2026, 10:04 pm

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில், மாவட்ட அளவில் மா சாகுபடியாளா்களுக்கு உயா் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலை- மலைப் பயிா்கள் துறை சாா்பில், செம்போடை ஆா்.வி. திருமண மகாலில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு தலைமை வகித்தாா்.

வேளாண் துணை இயக்குநா் ரா. நயினாா் முகம்மது, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா், வேளாண் உதவி இயக்குநா் சத்தியசீலன், தோட்டக்கலை அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மா சாகுபடி மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் நிலைய டாக்டா் கே. ரகு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து டாக்டா் கே. சந்திரசேகா், மா அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை குறித்து கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் பி.இரா. கமல்குமரன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிவ. பரிமேலழகன் வரவேற்றாா். நிறைவாக உதவி இயக்குநா் நா. சிவராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.