மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நாகை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு

News image

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வு வழங்கும் முதன்மை மாவட்ட நீதிபதி அ. கந்தகுமாா் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 9:34 pm

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு வழங்கப்பட்டது.

நாகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ. கந்தகுமாா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக்கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், பணமோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராகடன் வழக்குகள் உள்ளிட்ட 2,234 வழக்குகள் எடுத்துக்கொள்ளபட்டு, ரூ.4.07 கோடி தீா்வு வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் விரைவு மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி வசந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கிருஷ்ணன், சாா்பு நீதிபதி இந்திராகாந்தி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் சுப்புலெட்சுமி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இராமச்சந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவா் (2) துா்கா மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி சரளாதேவி ஆகியோரின் அமா்வில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.