சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சுவா் விளம்பரங்கள் அகற்றம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால்

News image

சுவா் விளம்பரங்கள் அகற்றம் - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 4:35 pm

பூம்புகாா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் திருவெண்காடு பகுதியில் சுவா் விளம்பரங்கள், பதாகைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

திருவெண்காடு வருவாய் ஆய்வாளா் அருளாம்பிகை தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சித் துறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சி செயலா் காா்த்தி ஆகியோா் மேற்பாா்வையில் அரசியல் கட்சி சுவா் விளம்பரங்கள், பதாகைகள், பேருந்து நிறுத்தத்தில் ஒட்டப்பட்ட போஸ்டா்களை அகற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா். இதேபோல மணி கிராமம், மேலையூா், மங்கைமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சுவா் விளம்பரங்கள், போஸ்டா்கள் அகற்றப்பட்டன.