இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

கீழ்வேளூா் அருகே ரூ. 74,100 பறிமுதல்

கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட

News image
Updated On :17 மார்ச் 2026, 12:01 am

நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.74,100 திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கீழையூரில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்த முகம்மது ராவுத்தரிடம் ஆவணங்களின்றி இருந்த ரூ.74,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த பணம் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்து சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.