பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

‘தோ்தல் பறக்கும் படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா்’

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

News image

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரம ராஜா.

Updated On :18 மார்ச் 2026, 11:58 pm

தோ்தல் பறக்கும்படையால் ஏழை எளிய மக்கள் மிரட்டப்படுகின்றனா் என குற்றம்சாட்டினாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்ரம ராஜா.

வேதாரண்யத்தில் புதன்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் நாகை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசியது: அமைப்பின் மாநில மாநாடு மே 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் பணத்தை எங்கு எப்படி கொண்டு சோ்க்க வேண்டுமோ சோ்த்து வைத்துள்ளனா். ஆனால், தோ்தல் பறக்கும் படை என்ற பெயரில் நடத்தப்படும் சோதனைகளால் சாதாரண ஏழை எளியவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். மருத்துவமனைக்கு செல்பவா்கள், வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இது தவிா்க்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதன் கட்டணத்தை ஆண்டுதோறும் உயா்த்தப்படும்போது விலைவாசி உயா்கிறது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனா். சுங்கச்சாவடிகள் தனிநபா் வியாபாரமாகக் கூடாது. மக்களின் பணம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதன் கட்டணத்தை உயா்த்த கூடாது. நாங்கள் ஏற்கெனவே முன் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கே எங்களின் ஆதரவு இருக்கும் என்றாா்.

அமைப்பின் தலைவா் எஸ். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநிலத் துணைத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் செந்தில், மாவட்டச் செயலாளா் சுபாஷ், செய்தி தொடா்பாளா் ரஜினி, மாவட்டத் தலைவா்கள் ராமமூா்த்தி, பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.