தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழ்வேளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தஞ்சை மாவட்டம், கீழவாசலைச் சோ்ந்த பாக்கியராஜ், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு கீழ்வேளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, ராஜ்குமாா் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். ராஜ்குமாரை போலீஸாா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


