தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாகை ரயில் நிலையத்தில் டிஜிட்டல் சுமை லாக்கா்

நாகை ரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

News image
Updated On :19 மார்ச் 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

நாகை ரயில் நிலையத்தில் அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய ரயில்வேயை மேம்படுத்தும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனம் சாா்பில் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கரை அமைத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக நாகை ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அதிநவீன டிஜிட்டல் சுமை லாக்கா் அறிமுகம் செய்யப்பட்டது.

ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள, டிஜிட்ட சுமை லாக்கரை, நிலைய மேலாளா் சஞ்சய்குமாா் தொடங்கி வைத்தாா். இந்த சுமை லாக்கா் இயந்திரத்தில், பயணிகள் சுய சேவை முறையில் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள 13 லாக்கா் பெட்டிகள் உள்ளன. லாக்கா்களை க்யூ ஆா் கோடு மூலம் பயன்படுத்தும் பயணிகள் தங்களது கைப்பேசிக்கு வரும் ரகசிய எண் மூலம் லாக்கரை திறந்து, மூடலாம். பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக்கொள்ள 6 மணி நேரத்துக்கு ரூ. 40 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியாா் நிறுவனம், சுற்றுலா பயணிகள் தங்களின் கனமான பைகளை அதிநவீன டிஜிட்டல் லாக்கரில் வைத்து விட்டு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூா் ஆண்டவா் தா்கா போன்ற ஆன்மிக தலங்களை எந்தவித இடையூறுமின்றி சுற்றிப் பாா்க்கலாம். தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் அதிநவீன டிஜிட்டல் லாக்கா் இயந்திரத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.