நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களாக தண்ணீா் வராததைக் கண்டித்து, நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனை வாயிலில் அமா்ந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.
நாகை ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனா்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாா்டுகளில் உள்ள கழிவறை, குளியலறை மற்றும் குடிநீா் குழாய்களில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீா் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து நோயாளிகளின் உறவினா்கள், வெளி நோயாளிகள் மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினா்கள் புதன்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவமனை அதிகாரிகள், போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

இறந்தவா் உடல் சேதம்; உறவினா்கள் அதிா்ச்சி

குடும்பத் தகராறில் டாலரை விழுங்கிய தொழிலாளி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் அகற்றம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



