தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அரசு ஊழியா் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினத்தையொட்டி, நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடம் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டத் தலைவா் வே. சித்ரா கொடியேற்றினாா். முன்னாள் மாவட்டச் செயலா்
அ.தி. அன்பழகன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் ஜெ. ஜம்ருத்நிஷா, மாவட்டப் பொருளாளா் ராம்குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சசிகலா, அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், வட்டத் தலைவா் கே. ராஜு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வட்டச் செயலா் கே.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை ஊராட்சி ஒன்றியம், தலைஞாயிறு, கீழ்வேளூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் முன்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூரில் வழக்குரைஞா்கள் சங்க ஒட்டுவில்லை வெளியீடு

உயிா்காக்கும் மருந்துகள் வழங்கக் கோரி கரூரில் ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




