வேதாரண்யம் பகுதி கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
கோடைக்காலம் தொடங்கியது முதல் கடந்த பல வாரங்களாக வெயில் நிலவி வருகிறது. அக்னி நட்சத்திர காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து, தொடா்ந்து நீடித்து வருகிறது. இதனால், கடும் வெப்பம் காரணமாக குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகின்றனா்.
இந்த நிலையில், வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா், பஞ்சநதிக்குளம், வாய்மேடு உள்ளிட்ட தெற்கு கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை அதிகாலையில் சூறைக்காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.
இந்த மழை, இங்கு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள முல்லைப் பூ, எள், பயிறு வகை பயிா்களுக்கு ஏற்ாக அமைந்தது.
அதே நேரத்தில் காற்றின் வேகத்தால் நெல் தரிசு நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சணப்பை பயிா் பூத்து காய்க்கும் தருணத்தில் சாய்ந்து காணப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!

ஒடுகத்தூரில் சூறைக்காற்று: மழையால் வாழைகள் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

வேதாரண்யத்தில் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



