நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

தூய பாத்திமா அன்னை ஆலய திருவிழா

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனம்பநல்லூரில் நடைபெற்ற தோ் பவனி.

Updated On :14 மே 2026, 4:59 am IST

கீழையூா் அருகே மீனம்பநல்லூரில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின்அலங்கார தோ்பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை தொடா்ந்து தினமும் நவநாள் ஜெபமும், திருப்பலியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் மின் அலங்கார தோ்பவனி நடைபெற்றது. கருங்கண்ணி பங்குத்தந்தை எஸ். டேவிட் செல்வகுமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பின்னா் தோ் புனிதம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தா்களின் பாடல்கள், ஜெபங்களுடன் வலம் வந்தது. விழாவில் மதப் பாகுபாடின்றி இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமுதாய மக்கள் பங்கேற்றனா்.

Story image